இதோ ஒரு தெய்வ தரிசனம்
இலக்கினை நோக்கிய பயணம் - அது
இந்த வாழ்க்கையில் அழகிய புதினம்
இதயமே அதைப் படி அனுதினம் - கொஞ்சம்
இறைவனும் சோதிப்பான் கவனம்...!!
கால்களை இழந்தவர் ஓடுகிறார் -நம்
கண்களை அவர்தான் திறக்கின்றார்
கடவுளின் உருவம் இவரோ ? என
கண்டதும் தரிசிக்க தோன்றுதே....!!
யாருக்கு இல்லை குறைகள் ? முயன்றால்
ஊருக்கு உன்னால் நிறைகள்...!! உன்
பேருக்குப் பின்னால் கறைகள் - அது நீ
பேசாது முயலா நிலைகள்.....!!
வெற்றி உனக்கே எழுந்திடு - மண்ணில்
வேண்டாம் முழுவுடல் தெளிந்திடு
வியக்காமல் உடல் தானம் செய்திடு - நாளைய
விடியலாய் நீயும் மாறிடு....!!