நாளையின் விதைகள்
தண்ணீரைக் கிழித்து தன்னுடல் தான்நுழைத்து
முன்னேறிச் செல்லுமாம் படகு - மண்வனத்தில்
கண்ணீரைக் கழித்து, துயர்கழித்து, மனம்விரித்து
நின்றாடும் வாழ்க்கை மலர்
செந்தேன் நினைவுகளின் வனமிந்த வாழ்வினில்
வண்டாகிப் பறக்கட்டும் மனம் - எந்நாளும்
முள்ளாடும் வேதனைகள் முளைக்கும்: வெட்டியங்கு
கள்ளூறும் மலர்ச்செடிகள் நடு
நேற்றின் தோல்விகளும் கண்ணீரை அழுகின்ற
இன்றின் பொழுதுகளும் உரமாகும் - காற்றில்
நாளையின் விதைகளை கூடையில் சுமந்துநற்
காலையின் கதவுகள் திற .