யாரோ நீ

நிலவொளியின் வேளையிலே
நினைவுகளாய் வந்தவளே
காற்றின் வெளியிடையில்
காதல் மொழிநடையில்
இதயம் எழுதி வைத்தேன்- அதில்
இவள் நிழல் நகல் பதித்தேன்
சாளரம் அது திறந்து
ஆள் அரம் பார்க்குமுன்னே
சாலையில் உனைக்கண்டேன்
சாவிலும் விதை கொள்வேன்
கண்ணாடி பூக்களை அவள்
கூந்தலில் சேர்த்தாலும்
மல்லிகை பூக்களாய் மணம்
சேர்க்கும் அவள் குழல்கள்
கன்னத்தின் ஓரத்தில்
கதிரவன் ஒளிபட்ட வண்ணத்தில்
இன்னொரு வெண்ணிலவாய்
இவள் என் எண்ணத்தில்
பெண்ணிலவாய் இவள்கண்டு
வெண்ணிலா வாய் பிளந்தது
ஏக்கம் கொண்டு