வேண்டும் என் வாழ்விலும் வசந்தம் -கயல்விழி
இவ்வுலகில் பிறந்ததினால்
இறைவனிடம் கேட்கின்றேன்
இன்பமென்றால் என்னவென்று
இது வரை அறிந்ததில்லை .
படைக்கப்பட்ட காரணத்தால்
பாரினிலே வாழ்கின்றேன்
பாதியிலே செல்லாமல்
பாவியாக அலைகின்றேன்
ஓடி ஓடி நன்மை செய்தும்
தேடி வரும் தீமை மட்டும்
ஏன் இறைவா என்மீது
இவ்வளவு வஞ்சம் செய்தாய் .?
முற்பிறவி செய்த வினை
இப்பிறவியில் தொடர்கிறதோ
எதையும் அறியா பேதையாக
இன்றளவும் வாழ்கின்றேன்
எல்லோரும் சொல்வார்கள் இன்பமான
வாழ்வென்று
என்ன தான் இன்பமென்று
இன்று வரை நானறியேன்
வதைத்தது போதும்
வாழ விடு இறைவா
ஏழு பிறப்பின் பாவத்தையும்
ஏட்டிலிருந்து அழித்துவிட்டு
இன்பமான வாழ்வுதனை
காட்டிவிடு நீ எனக்கு .