என் உறவுகள்
தாயின் கருவறையில்
தந்தையின் அரவனைப்பில்
பிறந்தவள் நான் *
அண்ணனிடம் சண்டையிடும்போது
குட்டிதங்கையாக நான் *
சகஆசிரியர்களிடம் வகுப்பறையில்
மாணவியாக நான் *
இறைவனிடம் பிரார்த்தனையில்
பக்தனாக நான் *
உற்றார் உறவினர்களிடம் ஒரு
உறவாக நான் *
நண்பர்கள் வட்டத்தில் ஒரு
தோழியாக நான் *
இந்திய சமுதாயத்தில் ஒரு'
குடிமகளாக நான் *
பணியில் மேலதிகாரரிடம் ஒரு
பணியாளராக நான் *
இன்னும் எத்தனையோ வகையில்
தொடர்கிறேன் நான் ....... *
நான் நானாக இருக்க
என்னை வழிநடத்தி செல்ல
எனக்குள் எத்தனை எத்தனை உறவுகள் *
என் உறவுகள் என்றும்
என்னை நல்வழிபடுத்தும் *
( என்னை நானாக மாற்றிய அத்தனை உறவுகளுக்கும் "என் உறவுகள்" சமர்பணம் ).