மாறுதல் தருமா தேர்தல்

இலங்கையில் தேர்தல்
இனியேனும் கிடைக்குமா
இதயத்தில் தேறுதல்

இரட்டை சின்னத்தில்
ஒற்றை எண்ணத்தில்
இரத்தம் குடிக்கும் பூச்சிகளாய்
இனவெறியில் ஏது மாறுதல்கள்

இனி எதை இழக்க முடியும்
எம் இதயத்தில் எதைக்கட்டி
இழுக்கமுடியும் எம் விழிகண்ட
வலிகளை எதைக்காட்டி
மறைக்க முடியும்

தேர்தல் வந்தால் சுவர்கள்
வெள்ளை அடிக்கபடுகிறது
மனங்கள் கொள்ளயடிக்கபடுகிறது
பின்பு மனிதம் கொன்று குவிக்கப்படுகிறது இங்கு

எரிந்த விரல்களுக்கு
எதற்காக மோதிரமோ
இழந்த கரங்களுக்கு
ஏன்தான் வெற்றிக்கேடயமோ

கடவுளையே வெறுத்த
மனம் கட்சி வேட்டிகளை
பொறுத்திடுமோ
சாவின் வலிகண்டோம்
சஞ்சல மனம் வென்றோம்

நமக்கென்ற ஆட்டிவரும்
அதில் நம்பிக்கை மீட்டி பெறும்
உறுதியோடு காத்திரு

எழுதியவர் : இணுவை லெனின் (29-Dec-14, 3:25 pm)
பார்வை : 62

மேலே