கண்மை கண்ணழகி -சகி

@@விழிகள் @@
மை தீட்டியே விழி அழகியே ...
ஆயுதமாய் தாங்கி சென்றவளே.... ...
கருவிழிகளுக்கு கருமை
தீட்டி என்னை தீண்டி
கைது செய்கிறாய் ....
என்று என்னை காண்பேன் ...
உன் கருவிழிகளுக்குள்....
உன் புருவங்களை
அம்பாக எய்து உன் விழிகளுக்குள்
என்னை கைதியாக்கி விட்டாயடி ...
விடுதலை செய்து
விடாதே ....
என் விழிகளில்
உன்னை காணவேண்டும்
ஆயுள் முழுவதுமே....