நட்பாகாதலாநட்புக்குள் காதல் தொலைத்து தேடும் மனம்

நட்பும் காதலும் ஒன்றா தோழி,
மனதில் ஏனோ குழப்பமடி.....
நட்பை விட்டு காதல் பிடிக்க ,
மனதில் ஏதோ வலிக்குதடி.
நட்பும் ஒரு காதல் தான் ,
ஏனடி உனக்கது புரியவில்லை.
புரிந்து கொண்டு விலகி சென்றேன்,
தியாகம் இதுவா தெரியவில்லை.
சொல்லடி என் தோழி,
நீ அமைதி காப்பது ஏனடி????
உன் பதிலை வைத்து தானே,
என் வாழ்கையும் ஆகும் போண்டி...
தெருவில் நடந்து போனேனே,
உன் பெயர் கண்டு நின்றேனே.
உருவம் இன்றி நீ இருந்தும்,
உன்னை தேடி அலைந்தேனே.
காதலா.......இது நட்பா....
யாரிடம் சென்று யாசிப்பேன்.
தெரியாமல் உன்னில் விழுந்தேன்,
பெண்ணே எழ முடியாமல் தவித்தேனே...
உன் சந்தோசம் முக்கியமென்று,
விலகி சென்று நடந்தேனே.
நடந்தும் சுற்றி திரிகின்றேன்,
உன்னை தேடி தனிமையிலே....
உன் நிம்மதி கருதி,
எனை கொடுத்து,
azhuthu கொண்டு போனேனே....
அழுதும் கண்ணீர் கேட்கிறதே,
அவளே எங்கு சொல்வாயோ...
இது நட்பினில் உள்ள தியாகமா,
யாரிடம் சென்று முறையிடுவேன்.
உன் வாழ்க்கையே என் காதல் தான்,
புரிந்து கொண்டு தான் செல்லடி.
நீ வாழும் நிமிடங்கள் என்றுமே,
என் கண்ணீர் மொழியடி.
நீயே சொல்லடி........
என்னை புரியாமல்,
தெரியாமல்,
கொன்று விட்டதேன் சொல்லடி....

எழுதியவர் : மோகன்குமார் (29-Dec-14, 6:01 pm)
பார்வை : 86

மேலே