விபத்தில் பலி – அம்மாவின் வலி

கல் சுமந்தேன்
மண் சுமந்தேன்
கல்லூரி படிப்பும் படிக்க வைத்தேன்...
நிலம் விற்றேன்
அணிகளன் விற்றேன்
கணினி படிக்க சேர்த்து விட்டேன்...

காவயித்து கஞ்சி குடித்தேன்
ஆனாலும்
நெல் சோறு சுவைக்க போட்டேன்…
கந்தல் துணியை
கட்டித் திரிஞ்சாலும்
கதரு துணி போட்டு அழகு பாத்தேன்...

இருபது வருஷம்
பார்த்து வளர்த்தேன்
இருபது நொடியில
எமனுக்கு கொடுத்தேன்…
என் இரத்தம் உறிச்சி
பாலா கொடுத்தேன்
பாலெல்லாம் இப்போ
இரத்த ஆறாக ஓடுகிறது...

நாடி தளர்ந்தாச்சி
நரம்பும் சுருண்டாச்சி
உன்னை ஆளாக்க பட்டபாடெல்லாம்
வீணாகி தூக்கி கொடுத்தாச்சி…….

எறும்பு கடிக்காம
ஈயும் அறிக்காம
மூடி வளர்த்தனே
உன்னை மூட்டையில்
பார்த்திடத்தானா?
மாசக் கணக்கா
நோன்பு இருந்தேனே
உன்னை வாரிக்
கொடுக்கதானா?

பெற்ற வயிறுதான்
பத்தி எரியுதே
உனக்கு கொள்ளிபோடவா
நான் பிள்ளை வரம் கேட்டேன்?
கொடுத்த ஆண்டவன்
பரிக்க நினைத்ததேன்
பாடுபட்டதே பாவமா
இந்த ஏழைமேல் தான் கோவமா?

நான் அழுது ஓஞ்சாலும்
போன பிள்ளை வீடு திரும்புமா?
ஆயுசு முழுக்க அழுது பார்த்தாலும்’
என் நெஞ்சு வலியுந்தான் ஓயுமா?
ஒத்த பிள்ளையை வளர்த்தேன்
சாலை விபத்துல பறிகொடுத்தேன்...

முந்தி போக நினைச்சி
இப்ப மூளை பிதிங்கி முடிஞ்சி
எதுக்கு தான் இந்த கலவரமோ
அந்த எமன் கிட்ட
போகத்தான் அவசரமோ...

எழுதியவர் : பிரபாகரன் (30-Dec-14, 7:54 am)
பார்வை : 133

மேலே