காரணம்

அந்த மெஸ்ஸில்
சாம்பார் சரியில்லை
- இது ஒருவன் !

அந்த மெஸ்ஸில்
சோறு கொட்டை
- இது இன்னொருவன் !

அந்த மெஸ்ஸில்
போதிய இடமில்லை !
- இது வேறொருவன் !

அந்த மெஸ்ஸில்
இட்லி தோசைக்கு
ரேசன் அரிசி
- இது மற்றொருவன் !

அந்த மெஸ்ஸின்
ஆஸ்தான பொரியலாக
பீட்ரூட்டை
அறிவித்தது விடலாம்
- இது இன்னுமொருவன் !

இவ்வாறாக
என் அறைநண்பர்களால்
புகார்ப் பத்திரம்
வாசிக்கப்பட்ட
அந்த மெஸ்ஸிற்கே
நான்
தொடர்ந்து போகிறேன் !

காரணம்,

மெஸ்ஸிற்கு
அம்மா பேர் !

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Dec-14, 12:38 pm)
Tanglish : kaaranam
பார்வை : 227

சிறந்த கவிதைகள்

மேலே