என்று தனியும் இந்த ரத்த வெறி

விலங்கிலிருந்து
பரிணமித்த மனித இனத்தில்
இன்னும் சில
மிருகங்கள்
மனித உடல் போர்த்தி
ரத்த வெறியோடு
திரிகின்றன.

குகை வாழ்வில்
தொடங்கிய பகை
இன்னும் முடிந்த பாடில்லை.

தன் வெறி தீர்க்க
பிறர் இரத்தம் குடிக்க
தெரித்தோடும்
மிருகங்களின் பழுதடைந்த
செவிகளுக்கு
தன் உறவை
பறிகொடுத்து
கதறி அழும்
மனித ஓலங்கள்
கேட்பதே இல்லையே?

விஞ்ஞானம் வளர்ந்தது
மனித மாண்பை மேம்படுத்த.....

சில கொடும்பாவிகள்
எலும்பை துளைத்து
உயிரெடுத்து
இடுகாட்டு தீயில் எறிவது
அப்பாவிகலயல்லவா?

மதத்திற்காக , சாதிக்காக
சீதை மூட்டி
மனித சதை எரிப்பது
எவ்வகையில் நியாயம்?

அர்த்தமற்ற கொள்கைகளுக்காக
அடுத்தவர் உயிர் குடிக்கும்
கொள்ளிவாய் பேய்களே?
உங்கள் நாசிக்கு ரத்த வாடை
பிடிக்குமென்றால்
உங்கள் தசைகளை
கிழித்துக் கொள்ளுங்கள்
உங்கள் சதைகளில்
சீதை மூட்டிக் கொள்ளுங்கள்...

உங்கள் மூடக் கொள்கைகளை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
அன்னியர் உருவத்தில்
ஆண்டவனை காணப் பழகுங்கள்
இறைவன் பீடத்தில்
பிணங்களை படைப்பதை
இறைவன் ஏற்பதில்லை
அற்பர்களே.....

இனியும் உங்கள் சண்டைகளை
விட்டொழிக்காது போனால்
பூமி மேட்டில்
மண்டை ஓடுகள் தான் மிஞ்சும்..

என்று தணியுமோ
இந்த ரத்த வெறி?

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (30-Dec-14, 4:32 pm)
பார்வை : 391

மேலே