மனைவி தாய் ஆகும் தருணம்

மனைவி தாய் ஆகும் தருணம்
அதுவோ இதுவோ
வேகமாக தாகமாக
துடிக்கிறேன் மனதில்
நீயோ நானோ
சாகும் நேரம்
வேர்க்கிறேன் இந்நொடியில்
யோசனை பத்து மாதம் முன்
ப்ராத்தனை இருக்கும் கடவுள் மேல்
இரு உயிராக கலந்தோமே
கரு உருவாக இருந்தோமே
மறு உயிராக பிறப்பாளோ?
கண்ணீர் வர துடைப்பாளோ?
வருவது நீயோ?
வரமோடு தானோ?
உயிரை கொடுத்தாள்?
கடவுள் நீயே!
உணர்வை புகுத்தினாள்?
தந்தையாக நானே!
தேடுகிறேன் உன்னை
சபிக்கிறேன் என்னை
காரணம் நானடி
என்வரம் நீயடி
உடலெங்கும் கண்ணாக
என்னுலகம் நீயாக
நரகத்தில் இருக்கிறேன்
நகராமல் பார்க்கிறேன்
தனியறையில் இருக்கிறாய்
கண்ணீரில் துடிக்கிறாய்
பிரிகிறேன் உன்னோடு
அழுகிறேன் என்னோடு
உன்னழுகையில் மிதக்கிறேன்
நிற்கையில் துவழ்கிறேன்
வேண்டினேன் உன்னை
காப்பாயா உன் உறவை ?
பெற்றாள் அவள்
உன் சொந்தமே!
என்முன்னால் இத்தருணம் கொடுமையே.
-மனக்கவிஞன்