இதுவரை கேட்ட பாடல்

இதுவரை கேட்ட பாடல்
குழந்தையாக கேட்டிருப்பேன் உன்னை
என் அழு குரல் மூலம்
மழலையாக கேட்டேன் உன்னை
தாயின் குரல் மூலம்
சிறு வயதில் கேட்டேன் உன்னை
இசையாக நினைத்து
பள்ளி பருவத்தில் கேட்டேன் உன்னை
பாடபுத்தகத்தின் வாசகம் கொண்டு
மாணவனாக கேட்டேன் உன்னை
தேசத்தின் உறவை கண்டு
இளமையில் கேட்டேன் உன்னை
பருவத்தில் தெரிந்ததை வைத்து
வாழ்க்கை தோல்வியில் கேட்டேன் உன்னை
மனம் இதமாகும் என்று கண்டு
காதல் தோல்வியில் கேட்டேன் உன்னை
காதலியை மறக்கலாம் என்று
வெற்றியில் உன்னை கேட்டதே இல்லை
நான் பாடகன் ஆகி விட்டேன் என்று
மகிழ்ச்சியில் கேட்டேன் உன்னை
எது என்று தெரியாமல் நேற்று
விடைகளுக்காக தேடினேன் உன்னை
என்னிடம் தெரிந்தததை வைத்து
மண்ணை விட்டு செல்லும்போது கேட்பேன்
உன்னை அடுத்தவர்களின் மனதை கொண்டு
-மனக்கவிஞன்