மழையையும் மாமூல் ஆக்குகிறான்- மதிகெட்டவன்

நல்லதொரு தாலாட்டில்
நன்றாக நான்தூங்க,
விழிநீரால் நீயழுதாய் -
விடியும்வரை மழைநீராய்...!

நில்..! கவனி..! செல்..! என்ற
நிபந்தனைக ளில்லாமல்,
நீர்நிலைகள் நிறைகுடமாக -
நிற்காமல் பொழிகின்றாய்..!

ஆசையது வருவோர்க்கு
ஆனந்த மழைநீர்தான் ;
அளவுமீறிப் போனாலும் -
ஆபத்தும் மழைநீர்தான்..!

நானிலமும் நலம்பெறவே
நினைக்கின்ற தாயவளாய்
நன்றிகெட்ட மானிடரோ
நயவஞ்சக சிந்தனையில்

உன்பேரைச் சொல்லியுமே
ஊழலதை செய்கின்றான்..
உள்ளதெல்லாம் சுருட்டிவிட
உயர்பதவி வகிக்கின்றான்..!

மண்ணோடு வரும்காலம்
மாதங்கள் அறிந்தயிவன் ;
மரணத்தை கண்டபின்பு
மந்திரியாய் வந்திடுவான்..!

முன்னின்று முகம்சேர்த்து
முழுவண்ணப் படமெடுத்து
வரிவரியாய் எழுதிடுவான்
வரிகளையும் ஏய்த்துவிட்டு..!

முட்டாளின் மூளைக்கு
முன்னூறு பொண்டாட்டி
முடிபிடியில் சிக்கிவிட
மூளைக்குள் மழைசெய்தி

மக்களவன் பேரைச்சொல்லி
முறையிடுவான் பலகோடி..!
முழுவதுமாய் வந்தபின்பு
முழுங்கிடுவா னிவன்கேடி..!

ஏவிவிடும் குண்டர்களால்
எழுதிவைத்த விதியதனை
அரசியலாய் ஆக்கிவிடும்
அரக்கணவன் அழிந்துவிட

எடுத்துவிடும் முடிவுகளை
எதிர்கால விழுதுகளின்
அடித்தளமா யமைத்துவிட
அமைதியென விழித்திடுவோம்

அடுத்துவரும் தேர்தலிலே..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (30-Dec-14, 7:28 pm)
பார்வை : 524

சிறந்த கவிதைகள்

மேலே