என்னையே வெறுக்கின்றேன்

மத குருமாருக்கான
ஆசனத்தில்
மதம்பிடித்த குருமார்கள்
மறுத்து பேச எவனும் இல்லை
மங்கை நான் என்ன செய்வேன் .?

காவி உடை அணிந்து விட்டால்
கள்ளனும் கடவுள் தானாம்
காரி உமிழ்ந்து செல்ல எண்ணம் தான்
ஆனால் கன்னி நான் என்ன செய்ய .?

கன்னியாஸ்திரியும்
கோயில் சாஸ்திரியும்
மிதிபலகையில் தடுமாற
கள்ள பிக்கு மட்டும்
ஒய்யாரமாய் முழு ஆசனத்தில் .

முதுகெலும்பில்லா மனிதனும்
முகம் கவிழ்ந்து நிக்கின்றான்
தமிழச்சி என்பதால் நானும்
தலை குனிந்து நடக்கின்றேன் ..

எழுதியவர் : கயல்விழி (30-Dec-14, 9:17 pm)
பார்வை : 266

மேலே