வாழவிடு
திருமணம் ஆகி
சில மாதங்களில்
மரணம் விழுங்கியது
மணவாளனை..
விதவை சூழ்ந்தது
மணப்பெண்ணை.....
பாவம் செய்தது
பெண்ணை இல்லை
ஆணா......
இருவரும் சொர்க்கம்
போல் சந்தோசமாக
வாழ்த்து வந்த
தருணத்தில்
இப்படி ஒரு
மரண ஊர்வலம்...
சூடிய மலர்கள்
கூட இன்னும் வாடாத
காலங்களில் வாழ்க்கை
கேள்விகுறி ஆனது.....
இறந்தவன் தனது
அடையாளத்தை விதைத்து
சென்றுவிட்டான் அவள்
வாயிற்றில்....
இனி இந்த பெண்ணின்
கண்ணீருக்கும்
வளரும் கருவுக்கும்
பதில் சொல்வது யார்?
கணவனை நினைத்துக்
கொண்டு வாழ பெண்ணால்
முடியும் - ஆனால்
வெளில் சென்று வந்து
முந்தானையை உதறினால்
கொட்டுமே ஆயிரம் கயவர்களின்
கண்கள்....
தாய் போல் மதி என்றால்
வேசி போல் பார்வைகளை
அவள் மேனி எங்கும்
மேய விடுகிறான்
கொடும் பாவிகள்....
பெண் அழகானவல்தான்
அவளுள் தீ இருப்பதை
எவனும் உணர்வதில்லை...
ஒருவன் பார்க்கும் காம
பார்வையை கண்டும் காணமல்
பெண் போகிறாள் என்றால்
அவனைக் கண்டு அல்ல -
அவளின் குடும்ப கௌரவம்
கெடக் கூடது என்பாதால் .....
எவனொருவன் தன்
மனைவியை தவிர மற்ற
பெண்களை எல்லாம்
தாயாக மதிக்கிரானோ
அப்போதே அவன் கடவுள் ஆகிறான்......
அட மானிடா
கணவனை இலந்தவலுக்கும் மனம் உண்டு.
அவளையும் வாழவிடு.....