திகைப்பு

ஒரு கணம்
அவள் எதிரே
புருவங்களை நிமிர்த்தி
கண்ணீர் மாலையோடு
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!
இத்தனை வருடங்களாக
அவன் புதைத்து வைத்த
அன்பு சுமமையை சுமந்து
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!
தினம் அவனை படைத்தவன்
முன் நின்றுகொண்டு இருந்த
காலத்தை நினைத்து
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!
சூடிய மலர்க்கொடியே
என் வசந்த காலத்தை
எடுத்து வந்தவன் நான் என்று
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!
இந்த உயிரே
உனக்காக தானடி என்று
உயில் சாசனம்
ஏந்தி கொண்டு
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!
உன்னிடம் பேசா வார்த்தைகள்
எல்லாம் அந்த நிலவு
பேசி காட்டினேனே..!
இக்கணம்
உன் மடல் அருகில்
கூற வந்தவன் நான்
பெண்ணே நீயோ
உன் மலர் மேடை
பயணத்தை தொடக்கியது ஏனோ
திகைத்து அவள் எதிரில் நிற்கிறான்........!

எழுதியவர் : விவேகா ராஜீ (30-Dec-14, 9:00 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
Tanglish : thikaippu
பார்வை : 135

மேலே