நன்றிகள் கோடி

நெகிழா மனதுடையோரும்
நெகிழவைத்த மழலைகளின்
புன்னகையில் கண்ட சுகங்கள்
நண்பனின் நினைவு நாளன்று

பார்த்தவுடனே பழகி
தெரிந்ததை சமைத்து
சமைத்ததை சுவைத்து
சுவையற்றதையும் ருசியாக்கிய
தோழிகளின்
செல்லச் சண்டைகளால்
வழுவாகிய உறவுகள் !!

பிறந்தது ஒருபுறமிருக்க
விபத்தாய் சந்தித்து
உள்ளத்தை பரிமாறி
கனவுகளை பகிர
கடவுள் தந்த சகோதரி !!

தோல்விகள் கண்டெடுத்த
விலைமதிப்பற்ற திறமைகள்
அழுகை கண்ட தோல்விகள்
முயற்சிகள் கண்ட வெற்றிகள் !!

காரணமின்றி பிரித்த உறவுகள்
காரணத்திற்காய் அலைந்த நிமிடங்கள்
நிமிடங்கள் கண்ட உண்மைகள்
உண்மைகள் தந்த வலிகள் !!

வினைஊக்கி (Catalyst)ஊட்டிய
ஊக்கங்கள்
ஊக்கங்கள் கொடுத்த
வெற்றிகள்
வெற்றிகள் கொடுத்த நண்பர்கள்


மாறாத நினைவுகள்
வலியான அன்புகள்
நிறைவேறா ஏக்கங்கள்
சொல்லப்படா சோகங்கள்
விடையில்லா வினாக்கள்

எண்ணிலடங்கா வலிகள்
காட்டிய புதிய பாதைகள்!

எனக்காய் பிறந்து
விடைபெரும் உனக்காய்
நன்றிகள் கோடி!!

புதிய விடியலை நோக்கி....
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : kopperundevi (31-Dec-14, 10:18 pm)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
பார்வை : 92

மேலே