இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கடந்த வருடம் எனக்கு பல கசப்பான அனுபவங்களையும் மகிழ்ச்சியான இனிய அனுபவங்களையம் கொடுத்திருக்கின்றது. இக் கசப்பான அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடங்களை மகிழ்ச்சியான அனுபவங்கள் கொடுத்த புத்துணர்வுடன் படிக்கற்களாக மாற்றி புத்தாண்டை எதிர் கொள்ள தயாராகிக்கொண்டிருக்கின்றேன்.
இந்த புது வருடமும் எனக்கு சவால் நிறைந்த ஆண்டாக அமையும் என்பதும் அவற்றின் இறுதியில் சந்தோசங்கள் காத்திருப்பதும் கண்கூடே...!!!
எனது வாழ்க்கையை மாற்றியமைக்க போகும் இந்த சவால்கள் நிறைந்த புத்தாண்டை எதிர் கொள்ள வீறு நடை போட தொடங்கிவிட்டேன்.
எனது உயிரான உறவுக்கும், என் இனிய நண்பர்கள் மற்றும் எழுத்து.காம் ஆசிரியர் குழாம் அனைவருக்கும் இப் புது வருடம் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்.
நிற்க...
இலைமறை காயாக ஒழிந்திருக்கும் - வெளி வர வழி தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு சிறந்த ஏணியாக இருந்து அவர்களுக்கான மரியாதையை - கௌரவத்தை வழங்கி ஊக்குவித்து தன் பணியை சரிவர ஆற்றி வரும் எழுத்து.காம் தளத்திற்கு இனி வரும் ஆண்டில் மேலும் புதுப்பொலிவுடன் புதுவரவுகளுடன் தனது சேவையை இனிதே தொடர மனதார வாழ்த்துகின்றேன்...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்