பாவம் மனிதன் தொழைத்தான் மனிதம்

பாவம் மனிதன்! தொழைத்தான் மனிதம்!!
அழுங்கள்
மனித இனம் படும்
அவலம் கண்டு அழுங்கள்
கடினம் இது
அழுவதல்ல
மனிதம் போற்ற
அவருக்காய் இரங்கிடப் பணிதல்
சிரியுங்கள்
அயல் வீட்டான் மகிழல்
கண்டு சிரியுங்கள்
முடியாது உன்னால்
சிரிப்பதல்ல
மற்றவன் உயர்வு கண்டு
உன் உளம் பூரித்தல்
புகழுங்கள்
நல்லவை செய்வார்
செயலுக்காய் புகழுங்கள்
உன்னால் முடியாது
புகழ்தல் அல்ல
ம்ற்றவர் தூற்றி
இகழும் உன்னால்
திறமை கண்டு ஏற்றல்
மனிதன்
மனிதம் மறந்து
மாண்புகள் இழந்து
தன்னலம் கருதி
பொதுநலம் மறந்து
வாழ்ந்திடப் பழகியதால்
மற்றவருக்காய்
அழுதல்
சிரித்தல்
புகழ்தல்
அனைத்தும் மறந்து
மருந்துக்கேனும்
மனிதன் மதிக்கும் பண்பு தொழைத்து
தடுமாறி வாழ்கிறான் பாவம்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (31-Dec-14, 9:16 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 176

மேலே