வருக வருக புது வருடமே

பல சாதனைகள்
பல சோதனைகள்
பல இழப்புக்கள்
பல சந்திப்புக்கள்
பல இன்பங்கள்
பல துன்பங்கள்
பல உறவின் பிரிவு
பல உறவின் அறிமுகம்
பல நோய்கள்
பல ஆயிரம் செலவுகள்
பல ஆயிரம் வரவுகள்
பலபேருடன் மோதல்
சில பேருடன் அன்பு
பட்டம் பதவி
படிப்பினை வேதனை
இத்தனையும் புரிந்து விட்டு
முயல் வேகத்தில் துள்ளி
ஓடுகின்றது பழைய ஆண்டு
இதையே கொடுக்கவோ
இல்லை இன்ப மழையில்
இதயம் குளிர வைக்கவோ
இதோ ஆமை வேகத்தில்
பதிங்கி வருகின்றது புது
வருடம் சாதனையோ
சோதனையோ வேதனையோ
தாங்கும் அளவு கொடு இறைவா
என்று அன்புடன் வரவேற்போம்
நின்று புது வருடத்தை உறவுகளே.......


அனைவருக்கும் புத்தாண்டு
வாழ்த்துக்கள்

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (31-Dec-14, 8:58 pm)
பார்வை : 158

மேலே