முரண்பாடு
முரண்பாடு. ....
உண்மை கூறினேன்
பொய் என்றனர் !
பொய் பேசினேன்
உண்மை என்றனர்!
சிறுகதை எழுதினேன்
யார் கதை என்றனர்!
எவரோ கதையில் என் பெயர் எழுதினேன்
நன்றாக இருக்கிறது
என்றார்கள்!
பாடலுக்கு வாய் அசைத்தேன் ! நல்ல குரல்
வளம் என்றார்கள்!
பாடல் பாடினேன்
யார் குரல் என்றார்கள்!
நாடகம் ஆடியது நானா
உலகமா!
கலிகால உலகம் கூறியது
இதுதான் இன்றைய
முரண்பாடு!

