கிரிதரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/qgane_22536.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிரிதரன் |
இடம் | : திருத்துறைபூண்டி |
பிறந்த தேதி | : 17-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 179 |
புள்ளி | : 31 |
தமிழ் உயிர் .........
இயற்கை அன்னை வழங்கிய
உணவுகளின் திருநாள்!
உழவர்களின் வெற்றி திருநாள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் (நம்பிக்கையின்) திருநாள்!
இறைவனுக்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி கூறும்
திருநாள்!
ஐந்து அறிவு உயிரினத்திற்கும் வண்ணம் தீட்டி நன்றி கூறும் திருநாள்!
பொங்கிய பொங்கல் போல்
வாழ்வு என்றும் சிறக்கும் நன்நாள்! இன்நாள்! !!
சூரியன் குடும்பத்தின் புத்தாண்டு திருநாள்! !!
இலை வாழ்த்தும் தை திருநாள்!! எதவோ தமிழர்
திருநாள்! !!பொங்கல்! !!
அஞ்சல் வழி வாழ்த்து
அட்டைகள் நவீன முகப்புப் புத்தகங்களின் பதிவுகளில்!
இனிய பொங்கல் திருநாள்!
வாழ்த்துக்கள் உடன்
கிரிதரன் .ந
----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------
கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .
கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .
வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .
சாதி ஒழி ! மதம் அழி! சாதி!
(பொங்கல் கவிதை போட்டி
2015)
மனித இரை தேடுகிறது...
மதம் பிடித்த மனிதனின்
மனம்....
ஆறறிவு சாதிச்சண்டை
விலங்குகளுக்கு இல்லை!
மதங்கள் உணர்த்தும் உண்மை மறந்து மனித
மிருகங்கள் பொய்மையின்
பாதையில்!
சாதி வெறி மனித இரத்தம்
தேடுகிறது!
யார் அழிக்க வருவார்!
காற்றே புயலாய் வா!
கடலே சுனாமியாய் வா!
தீயே எரிமலையாய் வா!
மனிதன் அழிக்கா !
சாதி அழி மதம் அழி!
சாதி மத
வெறியன் இடம்
இருந்து. ...
நாளைய தமிழும் தமிழரும்-
(பொங்கல் கவிதை போட்டி 2015)
தமிழ் தரணி ஆளும்
திருக்குறள் வழியே-----
வேற்று நாட்டவர் கற்க
கணினியின் பதிவுகளில்
தமிழன் மறந்த தமிழ்!
ஆங்கிலம் பேசும் தமிழ் குழந்தைகள்--------
தாய்மொழி தமிழ் விண்ணப்பங்களில் மட்டும்!
நாளைய தமிழும் தமிழரும் தீவு போல!
தமிழ் கவிஞர்கள் கையில் நாளைய
தமிழும் தமிழரும் வளர்பிறை
நிலவு !
தமிழன் இசை உலகம்
கேட்டது இவரால்!
உலகம் கொடுத்த ஆஸ்கர்
விருது இவரின் கையில்!
இவரின் வார்த்தை எல்லா
புகழம் இறைவனுக்கே!
என்ற புன்னகை முகத்துடன்!
மனம் மகிழ்ந்தது இவர்
இசையால்!
துன்பம் தூரம் ஓடின இவர் இசையால் !
ராகங்கள் தாளங்கள் ஆனது
ரகுமான் ! இசையில்!
இசை பிறந்த நாளோ
இசைபுயல் பிறந்த நாள்!
வாழ்த்துக்கள் உடன்
கிரிதரன். ந.
நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்கள்
காலப்போக்கில் குறைந்து,
அழிந்துவிட வாய்ப்பு இருக்கிறது அனால்,
நீங்கள் வளர்க்கும் மரங்கள்
தலைமுறை தாண்டியும் நிலைத்திருக்கும்...
மரம் வளர்ப்போம்!
மழையை பருவத்தில் பெருவோம்!
மனம் மகிழ்ந்து வாழ்வோம்!