கவிதை

சாதி ஒழி ! மதம் அழி! சாதி!
(பொங்கல் கவிதை போட்டி
2015)

மனித இரை தேடுகிறது...
மதம் பிடித்த மனிதனின்
மனம்....
ஆறறிவு சாதிச்சண்டை
விலங்குகளுக்கு இல்லை!
மதங்கள் உணர்த்தும் உண்மை மறந்து மனித
மிருகங்கள் பொய்மையின்
பாதையில்!
சாதி வெறி மனித இரத்தம்
தேடுகிறது!
யார் அழிக்க வருவார்!
காற்றே புயலாய் வா!
கடலே சுனாமியாய் வா!
தீயே எரிமலையாய் வா!
மனிதன் அழிக்கா !
சாதி அழி மதம் அழி!
சாதி மத
வெறியன் இடம்
இருந்து. ...

எழுதியவர் : கிரிதரன் (8-Jan-15, 9:44 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : kavithai
பார்வை : 90

மேலே