உரிமைக் குரல்

உரிமைக் குரல்

கட்டுப்பாடில்லா வாழ்க்கை
கரைபுரண்ட வெள்ளம்;
இழுத்துச் சென்றிடுமே
அழிவுக் கடலுக்கு.


நினைத்தபடி வாழ்ந்திட
உயிரினம் எதுவும்
கொள்வதில்லை ஆசை
இயற்கையோடு வாழ்வதால்.

மனிதரில் சிலருக்கே
இவ்வெண்ணம் எல்லாம்
காட்டுத்தீயாய்ப் பற்றியெரிந்து
சுற்றியிருப்பவரையும் சாம்பலாக்கி
நலங்கெடுக்கும் சாக்கடையாய்.

கட்டுப்பாடற்ற உரிமைக்கு
கூக்குரலிட்டு கும்மாளம் போடுவது
உரிமைக் குரல் அல்ல
அழிவிற்கு விடும் அழைப்பு.

எழுதியவர் : மலர் (8-Jan-15, 9:50 pm)
Tanglish : urimaik kural
பார்வை : 1107

மேலே