காசா - நிம்மதியா - என்றால் நிம்மதிதான் என் விருப்பம்

நெஞ்சில் கவலையோடு குறுகிப் படுத்தேன்
பட்டு மெத்தையும் முள்ளாய் குத்தியது
நெஞ்சில் நிம்மதியோடு நிமிர்ந்தே படுத்தேன்
கயிற்று கட்டிலின் கயிறுகள் அழுத்தியதும் மென்மையாய் இருந்தது.....

எனவே

காசுபணம் தரும் சுகங்கள் கானல் நீரில் மீன் பிடிப்பது - என்றும்
கருணை உள்ளம் நாம் கொள்வது - காலமெலாம் நிம்மதி அடைவது

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (8-Jan-15, 11:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே