பசியாறுமா

பத்தவைக்க வெறகிருந்தும்
பொங்கித்திங்க முடியல்ல
ரேஷனுல போட்டஅரிசி
ரெண்டுவாரம் பத்தல ....
பாழாப்போன வயத்துக்கு
பசிதாங்கத் தெரியல
வாழவழியும் புரியல
செத்தொழிய துணிவில்ல ....
ஒழச்சிபொழைக்க வழியில்ல
உடம்புலயும் வலுவில்ல
ஒடிஞ்சுபோன மனசால
ஒறக்கங்கூட வரவில்ல ......
அம்மாகொடுத்த இலவசத்த
சும்மாகெடக்க வேணாமுன்னு
வந்தவெலைக்கு கொடுத்தாச்சு
வித்துவயத்துல போட்டாச்சு .....
மோட்டுவளையப் பாத்துக்கிட்டு
முடங்கிக்கெடக்கப் புடிக்கல
பொழைக்கவழி அரசுசெஞ்சா
பசியாறி உயிர்வாழ்வோம் .....!!