நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”

அன்னைத்தமிழ் அகிலத்தையீர்க்க ஆங்கிலம் மெல்லடிபணிய
....அக்னிப்புத்திரர்கள் அசைத்தனர் அண்டவெளிகளை தன்விரலசைவினில்

நாசாமுதல் நானிலமும் தன்தடம்பதித்த தமிழன்
....நாடுவிட்டு கண்டம்விட்டு அண்டம்புக விழைந்தான்

பால்வீதியின் பல்நட்சத்திரக் கூட்டத்தில் பாதம்பதித்து
....பாசங்களை பாரெங்கும்தம் பதிவாய் விதைத்தெழுந்தான்

மங்கள்யான்தந்த மதிநுட்பத்தில் மனிதர்களில் முதன்மையாகி
....மறவாது உயிர்ப்பித்தான் தம்மரபுகளை பால்வெளியெங்கும்

மின்மினிப்பூச்சிகளின் மிளிர்தலாய் மிதவைவீடுகள்
....மீட்டெடுத்தன புதுஉலகத்தை பிரபஞ்சமெங்கும்

கணினியின் மூளைகள் தமிழ்பயின்று கண்சிமிட்டலில்
....கச்சிதமாய் கடத்தின எண்ணப்பிம்பங்களை உலகெங்கும்

ஒலியின் வேகத்திற்கீடாய் ஓயாது மனிதமனங்கள்
....ஒவ்வொரு நொடியிலும் நிகரற்புதத்தில் நிலைத்தது

உணவே மருந்தாகி.. அன்பே உரமாகி.. அனுபவம் அறிவாகி
....உயிர்த்தன உலகெங்கும் உண்மையின் குரல்கள்

பகை ஒழிந்து.. மதம் தணிந்து ..மனிதம் உயர்ந்து
....மகிழ்வின் சுடரொளியை மயக்கும்கதிரவன் மெல்லெழுப்பினான்

பூமிமெல்லவிரிந்து புவியெங்கும் பசுமையாகி தன்கிளைபரப்பி
....புத்துணர்வோடு தன்னை நிதமும் உயிர்ப்பித்துக்கொண்டது

சித்திரத்தில் உயிர்த்து.. சிற்பங்களில் வாழ்ந்து
....சிந்தையால் வானளந்து சித்துநிலைப்பெற்ற தமிழன்

தன்நிழல்பட்ட தேசமெங்கும் மெல்ல தன்சிறகுவிரிக்க
....தமிழும் தமிழரும் தவமொத்த நிலையில் இலயித்தனர்

---------------------------------------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன் .

முகவரி

குமரேசன் கிருஷ்ணன்
97,சங்குபுரம் 6ம் தெரு
சங்கரன்கோவில் -627 756
திருநெல்வேலி மாவட்டம் .

அலைபேசி - 90429 96431

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (8-Jan-15, 9:04 pm)
பார்வை : 252

மேலே