நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் போட்டிக் கவிதை 2015

ஆயிரக் கணக்கில் எல்லாம்
செறிந்திருந்தன..
நானூறுகளென அழகியல்பாடித்
திரிந்தோம்...
வாழ்ந்தோம் பெருமைகளை
வழித்து வீசி... வாழ்ந்து
கெட்டிருகிறோமென உணர்......

அலைவழி மிதந்தேறிய
ஆங்கிலமூலம் ....?. வணிகம்...!!

ஆமைத்தடம் தொடர்ந்திட்டு
ஆழித்தீவில் பொருள்விற்ற
மரபணுக்களில் பாசி துடை....

இங்கிலாந்து தெருக்களில்
இட்டிலிக்கடை நிர்மாணி..மல்லித் துவையல்
மகத்துவப் பாட்டோடு..

ஏர்க்கலப்பை கிளறவேண்டும்
ஏதென்சுப் பொதிமணலை....
சுகப்பட்ட இடைவெளியில்
சோளக்கஞ்சி.. சுக்குத் தண்ணி ...

அறிவியலின் அபூர்வங்கள்
தமிழ்பேசி இயங்க வேண்டும்..

ஆலையதில் இயந்திரங்கள்
தமிழ்பாடி உழைக்க வேண்டும்...

இறக்குமதிச் சந்தைகள்
தமிழ் கடந்தே இறங்க வேண்டும்...

ஏற்றுமதிப் பொருளெல்லாம்
தமிழ் சுமந்து பறக்க வேண்டும்....

இப்படியான ஒரு காலை ...
விடியலில்
எதிர்காலத் தமிழின் நாளை....!!


Saravanan Jaganathan
Sr.lecturer, School of pharmacy
KLMUc, Level 10
Wisma Havela Thakardhas
Jalan raja laut, Kualalumpur 50350
Malaysia HP: +60105047525

எழுதியவர் : நல்லை.சரவணா (8-Jan-15, 8:55 pm)
பார்வை : 161

மேலே