பறித்தாள் ஆனால் பறிபோகவில்லை

காலையில் எழுந்த பூம்பாவை அன்று தன் காலைக்கடமைகளை முடித்துக்கொண்டாள்.

குளித்துமுடித்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். பூந்தோட்டத்திற்குச் சென்றாள்.

செடிகளின் தலைகளில் அன்று விடியலில் பூத்திருந்த வண்ண வண்ணப் பூக்களைப் பறித்தாள்.

அந்த மலர்களை அழகாகத் தொடுத்தாள். தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்.

தன் கணவன் பூபாலனைப் பார்த்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பைப் பார்த்த பூபாலனின் சிந்தை பறிபோனது.

ஆனால்....

அவன் பறிபோகவில்லை.

எழுதியவர் : மா. அருள்நம்பி (1-Jan-15, 2:56 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
பார்வை : 217

மேலே