என்ன பதில்

டேய்... ரெண்டு பேரும் அங்க என்னடா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?

ஒண்ணுமில்ல டீச்சர்... காலையில எந்திரிச்ச உடனே பல்லு விளக்கிட்டுதானே டீ குடிக்கணும்..?

ஆமா..

இவன் சொன்னா கேட்க மாட்டேங்கிறான் டீச்சர்.

இல்ல டீச்சர்... பல்லு சுத்தமா வச்சுக்கதானே தேய்க்கிறோம்...

ஆமா...

அப்போ ஒரேடியா காலையில எந்திரிச்சதும் டீயை குடிச்சுட்டு பல் விளக்கினால் பல் கறை இல்லாம சுத்தமாகிடும் தானே டீச்சர்...

ஏண்டா வகுப்புல பாடத்தை கவனிக்காம சண்டை போட்டதுமில்லாம கேள்வி வேற கேட்குறீங்களா? ரெண்டு பேரையும் நல்லா வெளுத்தாதான் சரியா வருவீங்க..

(மூன்றாவது மாணவன் மனதிற்குள்..
..தெரியுமே..! பதில் சொல்ல வரலேன்னா ரூட்ட மாத்திருவீங்களே... )

அடுத்தவன் எழுந்து...

டீச்சர்...இந்த பிரச்சினைக்குத்தான் எங்க வீட்ல யாருமே பல்லு விளக்குறதே இல்ல...

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Jan-15, 4:51 pm)
Tanglish : yenna pathil
பார்வை : 186

மேலே