புகைத்தலின் புன்னகை - இராஜ்குமார்

புகைத்தலின் புன்னகை
~~~~~~~~~~~~~~~~~~~~

முப்பொழுதும் முனைந்து
மூன்றுநிமிட முடிவுகளாய்
மூச்சுக்குழலை முத்தமிடும்
புகையிலையின் புகைக்குள்
புதைந்து கிடப்பன
நாலாயிரம் நச்சுக்கள் ...

உலோகக் கலவையை
உதட்டோடு வைத்து
உறிஞ்சுதலே
புகைத்தலின் மறுவடிவம் ....

நுரையீரல் நுகர்தலில்
புலன்களை சிதைத்து
எண்பது விழுகாடு
வியாதியை விதைக்கும் ...

மரணத்தின் வேர்களை
மனித நரம்பினுள் நட்டு
தீடிர் மாரடைப்பை
திணிக்கும். ..

புகைத்தலை ...
உமிழ்நீர் உள்வாங்க
உணவுக் குழல்களை குடைந்து
உயிர்த் துளிகளை எரிப்பது
ஊடுருவிய நிக்கோட்டின் ..

நச்சுக்களை
நாக்கின்வழி நகர்த்தி
உடலில் உலவும்
உயிரைப் பிடுங்கும்
இறத்தல் காரணிகளில்
இரண்டாமிடம் .... புகைத்தலே ..


நொறுங்கிய நொடிகளில்
விரலின் இடையில்
புகையும் புகை
புற்றுநோயின் விதை....

மலட்டுத் தன்மையோடு
தமனிகளின் தடிப்பும்
உள்ளுறுப்புகளின் வெடிப்பும்...
புகைத்தலின் வெளியீடு ...

புகையிலை ...
சுவைத்தலும்
சுவாசித்தலும்
ஆபத்தின் அடித்தளம்....

எச்சரிக்கை வாசகம்
எத்தனை வந்தாலும் ....

விற்பனை உயர்வோடு
புகையிலை சுவாசம் ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Jan-15, 6:35 pm)
பார்வை : 371

சிறந்த கவிதைகள்

மேலே