சாதி ஒழி , சாதிக்க அதுவே வழி - மதம் அழி, மதிக்கு அதுவே விழி - பொங்கல் கவிதை போட்டி 2015

சாதிக்கும் மதத்திற்கும் சண்டையிடும் சகாக்களே,
சாகின்ற வரைக்குமே சாதியும் மதமும் !

சாத்தானின் சதியில்
பிறந்த சாதியினில்,
நாம் உடன்கட்டை
ஏறிக்கொண்டு இருக்கிறோம் !

ராஜாராம் - பிரபு கதையினை மறந்து
சாலமன் பிரபு கதைக்கு,
கருத்து கூறிக்கொண்டு இருக்கிறோம் !

சதியிலும் சாதியிலும்
சத்தமும் இரத்தமுமே மிஞ்சும் !

சதியை ஒழிக்க முடிந்த நம்மால்
சாதியை ஒழிக்க முடியாதா ??? - முடியும் !

சாதிக்க நினைப்பவன்
சாதியை நினைக்க மாட்டான் !

மதம் மனிதனின் மனதை
மயானமாக மாற்றுகிறது !

மனிதன் மயானத்தில் வசிக்கலாம்,
மனம் மயானத்தில் வசிக்க கூடாது !

மதத்தினை விட்டு வெளியேறி
மனிதனாக வாழ முயற்சி செய் !

மதியை உபயோகிப்பவன்
மதத்தை உபயோகிக்க மாட்டான் !

எழுதியவர் : s . s (3-Jan-15, 4:28 pm)
பார்வை : 118

மேலே