வாழ்ந்தது போதும்
பொய்யர்கள் நடுவிலே
போலியானதொரு புன்னகை...
சுயநலவாதிகளின் அன்பிலே
சுவையற்றதொரு வாழ்க்கை...
சுவாசிக்கும் காற்றில் கூட
விஷம் மட்டும் பாதிக்கும் மேலே..
பார்வை வட்டத்தினுள்ளே
சுடுகாடுகள் மாத்திரமே மீதியாய்!
நாளொரு நாடகம்
அரங்கேறும் இம்மேடைதனிலே
ஆயிரமாயிரம் நடிகர்கள்!
யாரை தான் நம்புவதென்ற
அந்த கேள்விதனை - இங்கு
யாரிடம் தான் கேட்பது நான்!
உணர்வுகள் மிதிக்கப்பட்டு,
உயிர் அந்தரத்திலே உஞ்சலாட,
வெறும் கூடு மட்டும் இங்கே!
நொடிக்கொரு நிறம் மாறும்
பச்சோந்திகள் இடையே
வாழ்ந்தது போதும்...!
இறைவா இரக்கம் காட்டிடு,
உன் இருகரம் ஏந்தி
வரவேற்று விடு - என்னையும்
உந்தன் பாசாங்கற்ற உலகிற்கே!