பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பொங்கல் கவிதைபோட்டி, இந்த ஆண்டு தம்பி கே.எஸ் கலை அவர்களின் தலைமையில் நடந்துகொண்டு இருக்கிறது.

ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் உழவர்கள் அனைவரும், ஓரிரு நாள் ஓய்ந்து கொண்டாடும், தமிழனின் பண்பாட்டு திருவிழாவான, உழவர்களின் அறுவடை திருநாளானா பொங்கல் பொன்நாளில். வருடா வருடம் நல்ல படைப்பாளிகளை அடையாளப்படுத்துவதே இந்த பொங்கல் கவிதை போட்டியின் உயர்ந்த நோக்கமாகும்.

அடுத்த ஆண்டுகளில் இருந்து இந்த பொங்கல் போட்டிகளில், சிறுகதைகளும். கட்டுரைகளும் சேர்க்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமைகள் அனைவரும் இந்த பொங்கல் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு, இந்த போட்டியினை சிறப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.

பொங்கல் கவிதை போட்டியின் விபரங்களை கீழே வரும் பத்திகளை கண்டு அறிந்துகொள்ளவும்.

மீண்டுமொரு புத்தாண்டின் பிடியில் லாவகமாய் தன்னை அற்பணித்து கொண்டிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

வருடாவருடம் நடத்தும் “தைத்திருநாள் கவிதைத் திருவிழாவினை'',
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்றுகொண்டு இந்தமுறை போட்டியினை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள், சிக்கல்கள் இல்லாமல் இந்தப் போட்டியினை நடாத்த தங்களின் பேருதவியை எதிர்ப்பார்க்கிறோம்.

மூன்று தலைப்புகள் படைப்புகளை ஆக்குவதற்காக வழங்கப் பட்டுள்ளன. தலைப்புகளை தெளிவாக உள்வாங்கி சமுதாய எழுச்சியையும் விழிப்புணர்வையும் நோக்காக கொண்டு படைப்புகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஒவ்வொரு தலைப்பிலும் வெற்றிப்பெறும் படைப்புகளுக்கு பணப்பரிசில்கள் உண்டு.

பெருவுள்ளம் கொண்டு பரிசுகளை வழங்க முன்வந்துள்ள நலன்விரும்பிகள் குறித்த விபரம் மற்றும் நடுவர்கள் விபரம் போட்டி முடிவுகளுடன் சேர்த்து அறிவிக்கப்படும். இவர்களுக்கு எங்களின் முற்கூட்டிய நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

உயரிய எண்ணங்களுடன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்
``````````````````````````````````````````````````````
• சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
• நாளைய தமிழும் தமிழரும் !
• இப்படி நாம் காதலிப்போம் !

நிபந்தனைகள்
`````````````````````
1.படைப்பை பதிவிடும்போது தவறாமல் தலைப்போடு அடைப்பு குறிக்குள் “பொங்கல் கவிதை போட்டி 2015” என்று குறிப்பிடல் அவசியம்.

2.சனவரி முதலாம் திகதி முதல் சனவரி (2015) பதினைந்தாம் திகதி நள்ளிரவு வரை நீங்கள் உங்கள் படைப்புகளைப் பதிவிடலாம், அதன் பிறகு பதிவிடும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

3.கவிதைகள் 24 வரிகளுக்குள் இருத்தல் வேண்டும். 24 வரிகளுக்கு மேற்பட்ட படைப்புகள் முதல் சுற்று தேர்விலேயே நிராகரிக்கப்படும்.

4.ஒழுங்கீனமான, ஆபாசமான, தரக்குறைவான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

5.எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.எழுத்துப் பிழைகளால் படைப்புகள் நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு ! பிறமொழிக் க்லப்பையும் தவிர்த்தல் அவசியம் !

6.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், ஒரே தலைப்பில் ஒன்றிற்கு மேல் பதிவு செய்யப்படும் கவிதைகளை நடுவர் குழு நிராகரிக்கும். (மூன்று தலைப்புகளிலும் தலா ஒரு கவிதை வீதம் எழுதலாம்.)

7.படைப்புகள் “பொங்கல் கவிதைப்போட்டி 2015” என்று அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டு, தளத்தில் ''மற்ற போட்டிகளுக்கு சமர்பிக்க'' என்பதை சொடுக்கிவிட்டு பிறகு சமர்பிக்கவும்.

8.அதே படைப்பினை “பொங்கல் கவிதைப்போட்டி” என்ற பெயரில் இருக்கும் கணக்கிற்கு விடுகை மூலம் அனுப்பப்படல் வேண்டும்.தளத்தில் பதியப்படும் போது, அவற்றை தொகுத்து எடுத்துக் கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக இவ்வாறு “பொங்கல் கவிதைப்போட்டி” என்ற கணக்கிற்கு விடுகைச் செய்ய கேட்கப் படுகிறீர்கள்.

9.அனுப்பப்படும் படைப்புகளுக்கு தானே முழு உரிமையாளர் என்ற உறுதிப்படுத்தலுடன், தமது பெயர், வயது, வதிவிடம், நாடு மற்றும் அழைப்பிலக்கம் போன்றவற்றை படைப்புடன் இணைத்து விடுகை செய்தல் வேண்டும்.(கட்டாயமானது)

10.படைப்பின் இணைப்பை மட்டும் விடுகை செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். இணைப்பை (வெப் லிங்க்) மட்டும் அனுப்பப் படும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

11.சமுதாய எழுச்சியையும் விழிப்புணர்வையும் மட்டுமே நோக்காகக் கொண்டு உயரிய சிந்தனையில் படைப்புகள் உருவாக்கப்படல் வேண்டும் !

12.தளத்தில் பதிவிடப்படும் போது சக படைப்பாளிகளால் வழங்கப்படும் கருத்துகள், புள்ளிகள், மதிப்பெண்கள் மற்றும் பகிர்வுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

13. எழுத்து தளத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் பங்குபற்ற முடியும்.உறுப்பினர் இல்லாத படைப்பாளிகள் தளத்தில் கணக்கொன்றினை ஆரம்பித்து படைப்புகளை அளிக்கலாம். (போலி கணக்குகள் மூலம் பதிவிடப்படும் படைப்புகள் நிராகரிக்கப்படும்)

13.மூன்று சுற்று தேர்வுகள் நடைபெறும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

14.சனவரி மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பரிசு விபரங்கள்
***********************
2015ம் ஆண்டிற்கான பொங்கல் கவிதை அறிவிப்பை “போட்டிகள்” பிரிவில் பதிவேற்றி இருக்கின்றோம் என்பதை அறிவீர்கள்.

மிகப்பெரிய பணப் பரிசுத்தொகையுடன் படைப்பாளிகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஆக்கங்களை எழுதுவதற்கென மூன்று தலைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேலுள்ள மூன்று தலைப்புகளிலும் கவிதைகளை எழுத யாவரையும் பெருமையுடன் அழைக்கின்றோம்.

சமுதாயத்தின் எழுச்சியையும் விழிப்பையும் தூண்டுவதற்கான சக்திகளாக படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

வழங்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புகளிலும் படைப்பாளிகள் ஆக்கங்களை வழங்க வரவேற்கப்படுகின்றீர்கள். ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே ஒரு படைப்பாளி எழுதலாம். மூன்று தலைப்புகளிலும் மூன்று கவிதைகளை எழுத வாய்ப்புண்டு.

இந்தப் போட்டிக்கான நிபந்தனைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கு தளத்தின் “போட்டிகள்” பிரிவில் இருக்கும் “தைப்பொங்கல் கவிதை திருவிழா” என்ற தலைப்பின் கீழுள்ள அறிவிப்பைக் காணுங்கள்.
பரிசு விபரங்கள்

முதலிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 1500 ரூபாய்கள் வீதம் = 4500 ரூபாய்கள்

இரண்டாமிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 1000 ரூபாய்கள் வீதம் – 3000 ரூபாய்கள்

மூன்றாமிடம் பெறும் மூன்று கவிதைகளுக்கு
தலா 500 ரூபாய்கள் வீதம் – 1500 ரூபாய்கள்

ஒவ்வொரு தலைப்பிற்கும் முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் என ஒன்பது படைப்பாளிகளுக்கு பணப்பரிசிகள் காத்திருக்கின்றன. பலருக்கும் பரிசிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றோம்.

மொத்தம் 9000 ரூபாய்கள் பரிசாக வழங்கப்படும் என்பதை பெருமையுடனும் உற்சாகத்துடனும் தெரிவித்துக் கொண்டு
படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

இந்த அறிவிப்பை தாங்கள் அனைவரும் பகிர்ந்துக் கொண்டு படைப்பாளிகளை தைப்பொங்கல் கவிதைத் திருவிழாவில் இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்கும் எங்களது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

நன்றிகள்
விழாக்குழு !

எழுதியவர் : விழாக்குழு ! (4-Jan-15, 12:05 pm)
பார்வை : 810

மேலே