வாடி ஆசிரமம் அமைக்கலாம்

ஏண்டி நாம முதுகலைப் பட்டம் வாங்கி நாலு வருஷம் ஆகுது. இன்னும் நமக்கு வேலை கெடைக்கல. வேலையில்லனா நம்மக் கல்யாணம் பண்ணிக்க யாரடி முன் வருவாங்க. நாம பணக்காரங்களும் இல்ல.

ஏண்டி ஏதோ படிச்சம். தேர்வு எழுதினோம். பட்டம் வாங்கினோம். போட்டித் தேர்வு எழுதி அதிலே தேர்ச்சி பெறக்கூடிய அறிவு நமக்கு இருக்கா? இல்லையே!

ஆமாண்டி தாராள மயக்காமல் மதிப்பீட்டினாலெ பெரும்பாலான பட்டதாரிகள் நம்ம நெலமையிலெதாண்டி இருக்காங்க.


அடியே மயிலு நாம கோடீஸ்வரராக ஒரு யோசனை சொல்லறேன். நீ கொஞ்சம் காதிலெ கேட்டுக்கடி.

சரி சொல்லு.

சொல்லறென்
நாம ரண்டு பேரும் சேந்து ஒரு ஆசிரமம் அமைக்கலாண்டி. நம்ம நாட்டில சாமியார்ங்கள நம்பறவங்க நெறைய இருக்காங்க.
சரி ஆசிரம் அமைக்கவும் பணம் வேணுமே.

பேங்க்ல கடன் வாங்கலாம். ஆசிரமம் நடத்தற சாமியாருங்கெல்லாம் கோடீஸ்வரர்களா இருக்காங்க. ஆசிரமத்துக்கு கெடைக்கற கோடிக்கணக்கான பணத்தையும் நமக்கு லோன் தர்ற பேங்க்லெயே சேமிப்புக் கணக்கலெ டெபாசிட் பண்றோம்னு உறுதி கொடுத்தா அவங்க ஆசிரமம் அமைக்க லோன் தருவாங்க.

நீ சொல்லறது அருமையான யோசனை. நமக்கு கல்யாணமும் வேண்டாம். எல்லோரும் நம்ம கால்ல விழுந்து கும்பிடுவாங்க. கெடைக்கற நன்கொடைல சொகுசா சாப்பிட்டிட்டு குளிர்சாதன அறையிலே சொகமாத் தூங்கலாண்டி.

.

எழுதியவர் : மலர் (4-Jan-15, 11:02 pm)
பார்வை : 152

மேலே