ரசிக்க சிரிக்க

1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????

2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
ஆசிரியர்: ?????

3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
நண்பர் 1 : ??????

4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
மனைவி : ?????

எழுதியவர் : திருக்குழந்தை (5-Jan-15, 4:32 pm)
Tanglish : rasikka sirikka
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே