ஆடைகள் பல விதம்

உடலுக்கு உடை போன்று முகத்திற்கு புன்னகை
நான் என்று கூரிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே
மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும்
கவலை அற்ற எதிர் காலத்திற்கு கல்வியே நிகழ் காலம்
ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை
சிரிப்பும் அழுகையும் வாழ்க்கையின் இரு தோழர்கள்
பொறாமை பொல்லாத ஒரு தீய ஷக்தி
ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்
தன் அடக்கம் ஒரு தலை சிறந்த குணம்
கோபத்தில் உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள்
முரண்பாடுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
ஆசை அனைத்தையும் கொல்லும்
கடமைகள் நம்மு டயவை நிகழ்ச்சிகள் இறைவன் உடையவை
உன்னையே நீ அறிந்துகொள்
மன நிறைவை அடையாதவர் தாழ்வை அடைவர்
மதிப்பு என்பது கேட்டு பெறுவது அல்ல
குறைந்த பேச்சே அதிகளவு பலனை தரும்
கடவுளைத் தவிர உயர்ந்த துணை வேறில்லை
மனிதனைத் துன்பத்திற்கு ஆளாக்குவது ஆசை
குழந்தைகளை மனத்தால் நேசியுங்கள்
கல்விக்குக் கடை இல்லை கற்றவர்க்கு இழிவில்லை.

எழுதியவர் : புரந்தர (5-Jan-15, 6:01 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 123

மேலே