பேசாயோ நண்பனே

நண்பா!
நண்பா!
காலமல்லாக் காலத்தில்
காலன் வந்துனைக்
காவு கொண்டான்
எனை இரண்டாய்க்
கீறிச் சென்றான்...

சுமை ஊர்தியாய்
எமன் வந்து
உன் உயிரைச்
சுமந்து சென்றான்
என் நினைவைக்
கவர்ந்து கொண்டான்....

சாலையில் சடலமாய்க்
கிடந்தாய் நீ
எனும் செய்தி
காதுகளை எட்டும் முன்
உள்ளத்தைச் சுட்டது...

சிரிக்கும் உன் செழித்த முகம்
சிதைந்த நிலை கேட்டு
உடைந்த என் உள்ளத்தை
உரைக்க ஓர் வார்த்தை இல்லை...

இத்தனை விரைவாய்
எமை விட்டு நீ விரைவாய்
என
ஏன் நீ உரையாய்?
உயிர் இனிக்கும் நட்பு
உயிர் துடிக்கும் நட்பாய்
உன் பிரிவால் ஆனதையா!

எனக்கு நீ சோறிட்டதும்
உனக்கு நான் சோப்பிட்டதும்
நிதமும் வந்து
நெருடி நிற்கிறது நினைவில்...

அழைக்கும் ஒவ்வொரு
அலைபேசி அழைப்பிலும்
உன் குரலிற்காய்
ஏங்கித் தவிக்கிறது
என் நெஞ்சம்!

எப்போது அழைப்பாய்
என் இனிய நண்பனே???

எழுதியவர் : செந்தில் (6-Jan-15, 10:15 am)
பார்வை : 280

மேலே