யாழெடுத்து மீட்டுகிறேன் பிறந்த நாள் வாழ்த்து
மோனையது முத்தாரமாய்
மிளிர்ந்து முத்தை வாரியிறைக்குதடி
ஏந்திழையே! நின்னை வாழ்த்தும்
என்வாழ்த்துப்பாவை எதுகையும் ஏந்துதடி
எதிலும் உன்னை ஏற்றம்காண வாழ்த்துதடி ...
வீணையை மேவுகிறேன்
வெண்பாபல இயற்றுகிறேன்
வீரத்தமிழச்சி நீ வெற்றிக்கொடி
நாட்ட நானும் வாழ்த்துக்கிறேன்
குழலெடுத்து ஊதுகிறேன்
கலிப்பாவொன்றை எழுதுகிறேன்
கருகிடாத தமிழ்போல் நலமுடனும்
களிப்புடனும் வாழநானும் வாழ்த்துக்கிறேன்
வாத்தியத்தை வாசிக்கிறேன்
வஞ்சிப்பாவை பூசிக்கிறேன்
வண்ணக்கொடி நீ வாடாத தமிழ்போல்
வாழ நானும் வாழ்த்துக்கிறேன்
யாழெடுத்து மீட்டுகிறேன்
யாப்புதனை நாட்டுகிறேன்
யதுகுல தோன்றலே யாழ்மொழி
நீ பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துக்கிறேன் .....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்மொழி