போலி சாமியார்

பகுத்தறிவு பாழ்பட்டுப் போனதைய்யா...
தொகுத்தறிவு என்னாச்சு இவர்களுக்கு...?
பாமரன் தான் பழியாகி போனானென்றால்
படிப்பாளி வாழ்க்கையிலும் இந்நிலையா...?

ஆன்மிகம் பெயராலே ஆபா... சங்கள்
அருந்திடவோ அயல்நாட்டு போதை பானம்
மகிழ்ந்திடவே பரத்தைகளின் பங்களிப்பு
மனத் திண்மை மாண்டதனால் மானக்கேடு...

ஊடகங்கள் செய்தித்தாள் சொன்ன செய்தி
ஊரறிந்து உலகறிந்து எச்சில் துப்ப
நாடகங்கள் ஆடுகின்றார் பக்தன் பெயரில்
நல்லோரே நாட்டோரே என்னத் தீர்ப்பு...?

தியானத்தின் பெயராலே நிதானம் தவறி
தீமைக்கு மண்டபமாம்; மாளிகை சபையாம்
மயானத்து மண்டகனின் வலைக்குள் வீழ்ந்த
மனிதா உன் மாண்பெல்லாம் மண்ணாய் போச்சா...?

போலிக்கு வேலிக்கட்டிப் பூசை வேண்டாம்
புத்திக் கெட்டுப் போகாதீர் இனியும் ஆங்கே
உடலுக்கு ஆடை மட்டும் அழகு அல்ல
உணர்வுக்கு ஆடைக்கட்டி வாழ்வீர் இங்கே...!

எழுதியவர் : இதயதாசன் (6-Jan-15, 10:51 am)
பார்வை : 623

மேலே