ஆழ்கடலைவிட ஆழமானது நட்பு 555

நட்புகள்...
சில்லென வீசும்
ஈர காற்று...
கதிரவன் மறையும்
மாலை நேரம்...
அலைகளின் மெல்லிய
தாளம்...
செவ்வானத்தின் நிறம்...
அலைகளில் சலசலக்கும்
மக்களின் கூட்டம்...
படகு மறைவில்
காதல் ஜோடிகள்...
குடைக்குள்ளும்
சில ஜோடிகள்...
இருவர் மட்டும்
வெட்டவெளியில்...
அவன் தோளின்மீது அவள்
தலை சாய்த்துக்கொண்டு...
விழிகள் மட்டும்
கடலைப்போல...
தேங்கி நிற்கும்
கண்ணீர் துளிகள்...
பலர் கேலி
செய்தார்கள் அவர்களை...
காதலர்கள் என்றும்,
கள்ளக்காதல் என்றும்,
வெட்ட வெளில இப்படி என்றும்...
அவளின் கண்ணீர் துளி
ஆழமான நட்பின் வெளிபாடு என்று...
எத்தனை பேருக்கு
தெரியும்...
ஆழ்கடலை ரசித்தாலும்...
ஆழ்கடலைவிட ஆழமானது
உண்மையான நட்பு.....