+சாதி அழி மதம் அழி சாதி - “பொங்கல் கவிதைப் போட்டி 2015”+

சாதியைத்தான் கட்டிக்கிட்டா தினம் தகராறு!
சாதியையே கலட்டிவிட்டா புது வரலாறு!

சாதிக்க நினைச்சுட்டா சாதியென்ன மதமுமென்ன‌..
சாதனை படைச்சிட்டா சரித்திரமும் உந்தன்பின்னே..

சாதிமதம் அடிச்சுக்கிட்டா எமனுக்குத்தான் கொண்டாட்டம்!
சகலருமே புரிஞ்சுக்கிட்டா அவனுக்கென்றும் திண்டாட்டம்!

யானைக்கும் மதம்பிடிச்சா பிரச்சனை தான்!
அந்த பிரச்சனைக்கே வாழ்க்கைப்பட்டா தீவினைதான்!

சகமனிதனை மதிக்காத சாதியையே புதைத்திடுவோம்!
சமஉரிமையை அளிக்காத சாதியையே எரித்திடுவோம்!

பிரச்சனையைத் தூண்டுவதில் சாதிமதம் முதலிடம்தான்!
பிரிவினையைப் பேணுவதில் நாளுமிவை ஒற்றுமைதான்!

தவிக்கும் வாய்க்கு சாதிஎன்றும் நீர்கொடுக்காது!
பசிக்கும் உயிர்க்கு சாதிஎன்றும் மனம்நிறைக்காது!

சின்னச்சிறு வயதினர்க்கு அன்பைக்கற்றுத் தருவோமே!
சாதிவிட்டு மதத்தைவிட்டு பண்பைவளர்க்க உழைப்போமே!

சாதியையே ஒரு களைபோல அறுத்தெடுப்போமே!
போதிக்கிற பேர் களையோ வறுத்தேடுப்போமே!

சபதம் எடுப்போம்! சாதிக்கொரு தடையிடுவோம்!
கலக்கம்தரும் சாதிவிட்டு மனிதத்தையே காத்திடுவோம்!

சாதி ஒழிப்போம்! சமத்துவத்தை படைப்போம்!
மதத்தை அழிப்போம்! மனத்தைமட்டும் படிப்போம்!

தீண்டாமை கற்றுத்தந்த சாதியைநாம் தீண்டாமை
வேண்டுமிந்த உலகிற்கு, உணர்விழக்க வேண்டாமே!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-15, 1:39 pm)
பார்வை : 847

மேலே