புதுமொழியே
என்
அகவிளக்கம் அனைத்தும்
அறிந்த புது மொழியே!
தோழி,
சகோதரி,
தாய்,
இன்னும் உலகில் எத்தனை
புனிதமான உறவுகள் உள்ளனவோ
அத்தனையாகவும் நீயே இரு!
பெயரில்லா உறவானாலும் சரி
அதுவாகவும் நீயே இரு!
அறிவியல் மட்டும் கொஞ்சம்
இடம் கொடுக்குமானால்
உன் தாய் வயிற்றில்
நானும்,
என் தாய் வயிற்றில்
நீயும்,
மறுமுறை பிறந்து
உருவாக்குவோம் வா
ஒரு முழுமையான உறவை!
நீ மட்டும்
வயதில் பெரியவளாய்
இருந்திருந்தால் - என்
எல்லா உள்ளச் சுமைகளையும்
உன்மேல் இறக்கியிருப்பேன்
நீயோ இளையவள் என்பதால்தான்
தயக்கமாய் இருக்கிறது!
ஏதுமறியா குழந்தைக்கு
தாய்மேல் மட்டும் இருக்குமே
ஒரு புரிதல் - அது
உனக்கும் எனக்குமாய் இருக்கட்டும்!
புது விளக்கம்
ஏதுமில்லாமல் புரிந்துகொல்லடி
என் புதுமொழியே!!!