உன்னையே கேட்பேன் மறுஜென்மத்தில்

காதலில் காகிதங்கள்
கவிதையாகலாம்
காரிருள் வானத்தில்
கண்ணாடி நிலவின் ரசனையில்
கடிதங்களெனத் தேடல்கள்
ஒருவழிப் பயணமாகலாம்
காட்டுக் காய்ச்சலில்
பனி முனக - களவாடல்
மீண்டும் இமை மூடலாம்...
எங்கோ மரித்த பூவின்
இறுதி வாசத்தில்
உணர்கின்றேன் பிரிவென்பதை
காலந்தோறும்
மீராவின் விரல்களில்
கண்ணீர் முத்து மோதிரங்கள்....
அவனற்ற நிமிடங்களில்
துளிச் சுவடாய்
அழிக்கப்பட்டுக் கன்னியானது
மனது ....
வாழ்வற்ற தேசத்தில்
எதுவொன்று
நம்மில் மரணத்தைத் தேடும்
காணாமல் போ
இரவாகிப் பகலாகும்
வரையும் காத்திரு ....