இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

தொட்டுக்கொள்ளும் பார்வை தொட்டுக்கொண்டே நின்றது
முதல் சந்திப்பின் ஏதோ ஒரு இடத்தில்... உன்னிடத்தில்
திரையரங்கின் திரைமறைவில்
ஓரமாக ஒதுங்கி இருந்தது நமது இருக்கைகளும்... இரு கைகளும்
திருவிளையாடல் ஆரம்பமானது
அரங்கத்திலும் நமது முதல் அரங்கேற்றத்திலும்
படத்தைத் தவிர மற்றதை பார்க்க தவித்த நேரத்தில்
படம் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது...
எல்லை மீற எத்தனித்த பொழுதில்
எதிர்பாராமல் இடைவேளை விட்டது படம்...
இன்று பூங்காவின் புதருக்குள்
நான் எவ்வளவு தொட்டும்... சிவக்காமலே இருந்தது உன் கன்னம்
நேற்றுவரை தொடாமலே சிவக்கும் என்றிருந்த கன்னம்
இதுநாள்வரை முத்தம் கிடைப்பது
போராட்டமாகவே இருந்தது காதலில்.....
முத்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்வரை
கடற்கரையின் மணல்வெளியில் - நாம்
கட்டித் தழுவிய இடைவெளியில்
கண்டவர்களெல்லாம் கால் நனைத்துக் கொண்டிருந்தார்கள்
கடல் அலைகளில் அல்ல... நமது காம அலைகளில்
விழித்துப் பார்த்தோம் காமம் கண் மூடியது
விலகி நின்றோம் காதல் கண் திறந்தது
வா இப்படியே நாம் காதலிப்போம்
காதலில் மட்டும்தான் விலகி இருப்பதே சேர்ந்து இருப்பதாய் அர்த்தம்
==================================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9739 544 544