சாதி ஒழி மதம் அழி சாதி -பொங்கல் கவிதை போட்டி2015
பாவி மனிதத்தில் பாதி இதயத்தில்
சாதிவெறி ஊற்றி சமைத்தவன்யாரடா
தலைமுறை கடந்த பின்பும் அதன்
தலையது நசுங்கவில்லை இன்னும்
சாயமும் வெளுக்கவில்லை
உயிர்களை கடவுளாய்பார்க்க
மதம் கற்றுகொடுத்ததெனில்
மனிதனில் மதவெறி பூசி
பிணங்களாய் பார்ப்பதுவேன்
மண்ணின் மாராப்பாய் மனிதன்
மதத்தை போர்த்தி வைத்தான்
மனிதம் தெளியுமுன்பே
மண்ணுள் மாண்டு கொண்டான்
சாதி சாதியென சாதிக்கும் ஆசையை
சாக்கடையில் போட்டு விட்டு
தீண்டாமை கரம்கொண்டு
தீண்டுவதெப்படி வாழ்க்கையை
நாகரிக மழையில் தலைகள்
நனைந்தபோதும் பாதங்கள்
சாதிய சகதியை தாண்டவில்லை
அரிவாள் கொண்டு அழிக்க
சாதி மதம் களைகளல்ல
அறிவால் கொன்று அழிக்க
வேண்டிய மாய விருட்சங்கள்