நண்பனின் கடுப்பு

அந்திமயங்கும் வேளை. வெள்ளவத்தை காவல்நிலையத்துக்
கு அடுத்த பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டு போய்வருவோரை கணக்கு பண்ணிட்டு இருந்தன்.
கடுப்புடன் வேகமாக வந்த நண்பனிடம்,

"என்ன மச்சி, பயங்கர கோபத்தில இருக்கிறாய் போல. யார் மேலடா இந்த கோபம்?”

“இனிமே என்ன நடந்தாலும் இந்த லவ் பண்ணுகிறவங்க கூட கூட்டே வைச்சுக்க கூடாதுடா. போதும்டா சாமி”

“அப்பிடி என்னடா மச்சி நடந்தது?”

“இனி என்ன நடக்கனும்...... ஒருத்தன் தன்ர லவ்வரை பார்க்கிறதுக்கு என்னையும் கூட்டிட்டு போனான்டா. அவங்கள் இரண்டு பேரும் கதைச்சிட்டு இருந்தாங்கள். திடீரென அவன் வந்து 'இதில இருந்து பெட்டைகளை சைட் அடிக்காதேடா. அவள் எனக்கு பேசுறாள்' என்று சொல்லுறான் மச்சி. அவங்க லவ் பண்ணுறதுக்கு நான் ஏன்டா 'காயணும்'. சொல்லு பார்ப்பம்...”

“............” நான் மௌனமாவே இருந்தேன்.

“அதான் அவங்கள் செட் ஆகிட்டாங்கல்லே. போய் துலையவேண்டியது தானே. எங்களை ஏன்டா அப்பிடி பண்ணாதே, இப்பிடி பண்ணாதே என்று சொல்லுறாங்கள். அதுவும் அவளுக இருக்கும் போது தான் எல்லாம்...” அவனே தொடர்ந்தான்.

கடுப்புடன் கொஞ்ச நேரம் அமைதியாக எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மச்சி... எனக்கொரு சந்தேகம்டா.... அவங்கள் இரண்டு பேரும் தானே லவ் பண்ணுறாங்கள். நீ மற்ற பொண்ணுகளை பார்த்தால் அவளுக்கு ஏன்டா கோபம் வரணும்” என்றேன்.

கொலைவெறியுடனான அவனது பார்வை என்மேல் திரும்பியதும்,
“மச்சி... கொஞ்ச வேலை இருக்கு. போயிட்டு வாறன்டா” என்று விட்டு ஒரு குண்டை போட்டு விட்ட சந்தோசத்தில வீறு நடை போட்டேன்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (7-Jan-15, 7:53 am)
Tanglish : nanbanin kadupu
பார்வை : 328

மேலே