நீலக்குயில் தேசம்20---ப்ரியா

திருவனந்தபுரத்தில் வந்து இறங்கிய மதன் எதேச்சையாக அந்த பூங்காவை நோட்டமிடும் போது தன் தங்கையை மாதிரி இருக்கும் அவளைப்பார்த்ததும் ஆச்சரியமும் சந்தோஷமும் முகமெங்கும் பரவ இவள்தான் நம் மாமாப்பெண் கயல்விழி என்பதை திடமாக யூகித்துக்கொண்டான்.

அவளை சந்தித்து பேசவேண்டுமென விஷயத்தை தன் நண்பனிடம் சொல்ல அவனோ தடுத்தான்......அதாவது இதுவரைக்கும் உன் மாமாக்குடும்பத்துக்கும் உனக்கும் எந்த சம்மந்தமுமில்லை இப்பொழுதுதான் பேச ஆரம்பித்திருக்கீங்க பார்த்த உடனே அவக்கிட்ட போய் பேசுறது தப்பு அதுமில்லாம அவகூட நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இப்போ போய் நீ பேசுறது சரி இல்லை என்று நண்பன் சொல்ல.......இதுவே சரி எனப்பட்டது.

ஆனாலும் இவனுக்கு மனதில் ஏதோ உறுத்தல் இவ்ளோ பக்கத்தில் இருந்து பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் மதனின் ஏக்கம் அவனது கண்களைப்பார்த்த அவனது நண்பன் அதை புரிந்துகொண்டு......."வாடா நாமும் பூங்காவிற்குள் போலாம்" என்று அழைக்க....புரியாமல் அவனை நோக்கினான்....?

ம்.......வா பேச முடிஞ்சா பேசலாம் இல்லன்னா பார்க்கலாம் இல்ல உன் மாமாப்பொண்ணை என்று கிண்டலடித்தான் அவன்.....
அவன் பேச்சைக்கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றார்கள் இருவரும்.


ராகேஷ்,கயல்விழி மற்றும் அவளது தோழிகளை பின் தொடர்ந்தே இவர்களும் பூங்காவிற்குள் சென்றனர்.கயல் தன் தங்கை ப்ரியாவை ஒத்திருந்தாலும் இவளது துடுதுடுப்பு உதடோடு சேர்ந்து கண்ணும் பேசுவது ஒருவித தனி அழகாய்தான் ரசித்தான் மதன்.

"மாமாப்பொண்ணு சும்மா கும்முன்னு தோல் சீவி வைத்த வெள்ளரிக்காய் மாதிரி கலரா அழகா இருக்காடா உனக்கு ஏற்ற ஜோடிதான் எப்டியாவது மடக்கிரு" என்று நண்பன் சொல்ல.......டேய் சும்மா இருடா என்று வாய் சொன்னாலும் கண்கள் அதை மறுத்தது.....வெண்மேகமும் கருமேகமும் குலைந்து செய்த கலவை போல் வெள்ளை நிறச்சுடிதாரில் வைரம் போல் மின்னிக்கொண்டிருந்தாள் கயல்விழி.
வெள்ளைதேவதைடா உன் ஆளு குடுத்து வச்சவன் என்று ஏக்கமாய் சொன்னான் நண்பன்.........ஆனால் எதையுமே இவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை அவன் கண்களோ அவள் வசீகரக்கண்களையும் அவளது அசைவுகளையும் கவனித்துக்கொண்டிருந்தன.மதன் மனதும் அந்த நொடி சிதைந்துதான் போனது.

சிறிது நேரம் சென்றதும் அவர்கள் ஒரு இருக்கையில் அமர்ந்தனர்......அவர்களுக்கு பின்புறமாக இருந்த இருக்கையில் அவளுக்கு பின்புறம் அமர்ந்து கொண்டான் மதன்..........அவளது அந்த சாமந்தி பூவின் வாசனை அவனை ஏதோ செய்தது கண்களை மூடிக்கொண்டு அந்த சுவாசத்தை முழுமையாக இதயம் வரை இழுத்து நுகர்ந்து ரசித்தான் சாமந்தி வாசம் இவனுக்கு பிடித்த ப்ளேவரில் ஒன்று......மறுபடியும் அவர்கள் அங்கிருந்து நகர இவனும் ஏக்கத்தோடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்...........நண்பன் அழைக்க சரி போலாமென கிளம்பினர் ஆனால் கண்கள் அவளையே மேய்ந்து கொண்டிருந்தது.....

போகுமிடமெங்கும் அவள் நினைவுகளே வந்துகொண்டிருந்தது....தன் ரூமுக்கு வந்தவன் அவளது நினைவுகளில் தூங்கிப்போனான்.

அந்த சமயம் போன் சிணுங்கி அவனது தூக்கத்தை கலைத்தது.....எடுத்தவனுக்கு எல்லையில்லா சந்தோஷம் காரணம் அழைப்பில் கயல்விழி.......இவள் எப்படி நமக்கு?????ஒருவேளை நம்மை இன்று அவள் கண்டுபிடித்திருப்பாளோ?என்ற கேள்விகளுடன் குழப்பமாய் செல்போனை எடுத்து காதில் வைத்தான் அவனது குழப்பத்தை தீர்க்கும் வண்ணம் இவன் பேசுவதற்கு முன் அவளே கேட்டுவிட்டாள் "அத்தான் நீங்க இங்க கேரளாவுல தான் வேலைபார்க்கீங்களா?இப்போதுதான் பிரியதர்ஷினி என்னிடம் சொன்னாள் எங்களுக்கும் இங்கேதான் ஆனால் தூரம் அதிகம்"என்று அவளே அவளே சொன்னாள்.

எதுவும் தெரியாதவன் போல் ஓ அப்டியா சரி நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம் என்றான் மதன்......அதற்கு உடனே மறுத்துவிட்டாள் கயல் வேண்டாம் அத்தான் தாத்தா மனசு மாறுகிற வரைக்கும் அத்தை குடும்பத்துல இருந்து யாரையும் பார்க்கமாட்டேன்னு மனசுல ஒரு முடிவு எடுத்துட்டேன் எனக்கும் நம்ம குடும்பத்த பார்க்க ஆசைதான் ஆனால் இப்போதைக்கு வேணாம் என்று தீர்க்கமான குரலில் சொன்னாள் கயல்.....அவளது இந்த எண்ணம் மதனுக்கு ரொம்பவே பிடித்துப்போனது.

ம்......சரிமா பார்க்கும்போது பார்க்கலாம் என்று சொல்ல.....சிறிதுநேர உபசரிப்புக்குப்பின் அழைப்பைத்துண்டித்தார்கள்.

இதற்கிடையில் மறுபடியும் கயலின் தாத்தா சாமியாரைப்பார்க்க சென்றார் அவர் சென்றது வீட்டிலிருக்கும் யாருக்குமே தெரியாது.
சாமியார் இவரைப்பார்த்ததும் விஷயத்தை புரிந்து கொண்டார்.....பிரச்சனை ஒன்றுமில்லை இவரது மனதே பிரச்சனை என்று யூகித்தார்..........!

கயலின் கனவுப்பற்றி விசாரித்தார் சாமியார்.......அதில் எந்த பிரச்சனையுமில்லை ஐயா ஆனால் என் பேத்தியின் மீது அந்த சாமந்தி வாசம் வரும்போதெல்லாம் என் மனது படாத பாடு படுகிறது சிறு வயதிலேயே அப்பாவை இழந்த பொண்ணு எங்கள் அரவணைப்பில் இன்னும் செல்லமாய் வளர்த்துட்டோம் அவளுக்கு ஏதாவதுன்னா எங்க யாராலயும் தாங்கிக்கமுடியாது என்று விசும்பலோடு சொன்னார் தாத்தா.......இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? சொல்லுங்க ஐயா நாங்க பண்றோம் என்று அப்பாவியாய் கேட்டார்...?


தாத்தாவின் ஆழ்மனதை நன்றாக புரிந்து கொண்டார் சாமியார்....இதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது....உங்க எல்லாரோட ஜாதகத்தையும் கொண்டு வந்த சமயம் நான் கணித்த ஒரு விஷயத்தை இன்றும் நன்கு ஆலசித்தேன்........அதை சரி செய்தால் ஓரளவுக்கு பிரச்சனையிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது என்று சாமியார் சொல்ல.......என்ன சொல்லுங்க ஐயா எதுனாலும் செய்றோம் என்று உறுதியாய் அவர் சொன்னார்.

உங்கள் குடும்பத்தில் உங்களால் சபிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் ஏக்கம் இன்றும் மாறவில்லை அவள் மனதில் ஆறாத வடுவாய் இருக்கிறது அவள் யாரென்று யோசித்து சொல்லுங்கள் அது உங்கள் நெருங்கிய உறவாகவும் இருக்கலாம் தூரத்து உறவாகவும் இருக்கலாம் அதுவும் உங்களுக்கு ஒரு குறையே என்று முடிச்சை அவிழ்த்துவிட்டார் சாமியார்.....யோசித்து நிதானமாக சொன்னால் போதும் இன்று முக்கிய பூஜை இருக்கிறது அடுத்த செவ்வாய்க்கிழமை வாங்க என்று அவரை அனுப்பி வைத்தார் சாமியார்.........அவரது முகபாவனைகளிலிருந்து இவர் தெரிந்தே ஏதோ தவறு செய்திருக்கிறார் போல இருக்குதே இப்படி முகம் வியர்த்துக்கொட்டுகிறது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் சாமியார்......!
இன்னொருப்பக்கம் "அம்மா அண்ணன் இருக்குமிடமும் நம்ம குடும்பம் இருக்குமிடமும் கிட்டத்தட்ட ஒரே இடம்தான் அம்மா.........ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா அடுத்த விடுமுறைக்கு நாம போலாமா ப்ளீஸ் அம்மா"என்று தன் தாயிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ப்ரியா....




தொடரும்.......!

எழுதியவர் : ப்ரியா (6-Jan-15, 2:59 pm)
பார்வை : 290

மேலே