வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்

நற்றமிழில் எழில் கவிதை - அது
நாணத்தோடு அவள் புன்னகை - அதை
சிற்றருவி என ரசிக்க - என்
சிந்தையிலே கவி பாயும்
சித்தம் எல்லாம் தமிழ் நிறைந்து
சத்தம் இன்றி மவுனம் இசைக்கும்...
சிதறாமல் நினைவு குவிந்து
சிலை அழகில் கவிதை பெறும்.....
தவம் என்பது காதல் என்றால்
தவநிலையை நான் அடைய வேண்டும்
வரும் கடவுள் வடிவழகிலும் நீயே வந்து
வண்ணத் தமிழ் பெண்ணே காதல் வரம் வழங்க வேண்டும்